Saturday, July 27, 2024
HomeTamilசடுதியாக குறைந்தது கோதுமை மா விலை!

சடுதியாக குறைந்தது கோதுமை மா விலை!

திறந்த கணக்கு முறைமைக்கு அமைய, இன்றிலிருந்து டிசம்பர் 31 ஆம் திகதி வரை இலங்கைக்குள் கோதுமை மாவை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சு அனுமதித்துள்ளது.

அதேவேளை ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் தற்போதும் புறக்கோட்டையில் கோதுமை ஒரு கிலோகிராம் 250 ரூபாய் முதல் 260 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக புறக்கோட்டை அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை குறைப்பதற்காகவும் கோதுமை மாவின் விலையை குறைப்பதற்காகவும், வர்த்தக அமைச்சு புதிய திட்டம் ஒன்றை அமுல்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular