Friday, July 26, 2024
HomeTamilசிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள்!!!

சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள்!!!

சிறுவர்கள் தொடர்பாக மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம், சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் அதாவது சுமார் 10,000 முறைப்பாடுகள் மேல் மாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.

அந்த முறைப்பாடுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அந்தந்த பகுதியின் காவல் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக உடல் குறைபாடுகள், மன நிலைகள் மற்றும் குழந்தைகளுக்கான நிதி நெருக்கடிகள் தொடர்பான முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெறுவதாக அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறுவர் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணும் நோக்கில் வடமாகாண சபை விசேட அவசர உதவி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி 070 666 66 77 என்ற இந்த இலக்கம் நேற்று (25) முதல் செயற்படும் என வடமாகாண சபை அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular