Friday, July 26, 2024
HomeTamilசுங்கத்தினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்!!!

சுங்கத்தினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்!!!

இலங்கை சுங்க திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அரச சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத்தால் (SLC) பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, போதைப்பொருள் தடுப்பு உட்பட இலங்கை காவல் திணைக்களத்தின் சோதனைகளுக்கு பயன்படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

சட்டவிரோத இறக்குமதி காரணமாக சுங்க திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட சில வாகனங்கள் சுமார் ஏழு வருடங்களாக துறைமுகத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், அந்த வாகனங்களை விடுவித்து, மக்களின் நலனுக்காக அவற்றைப் பயன்படுத்துவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளது” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கூறினார்.

போதைப்பொருள் கடத்தல் சோதனைகளுக்காக சுமார் 12,000 வாகனங்கள் காவல்துறையினரிடம் உள்ளன. அவற்றில் பாதி 20 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை என கூறினார்.

“இந்த வாகனங்கள் நாடு முழுவதும் உள்ள 600 காவல் நிலையங்களுக்கும், புதிதாக நிறுவப்பட்ட 111 காவல் நிலையங்களுக்கும் போதுமானதாக இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular