Friday, July 26, 2024
HomeTamilதனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மேக்கிங் விடியோ வெளியானது!

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மேக்கிங் விடியோ வெளியானது!

நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்ற நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

1930களின் பின்னணியில் நடக்கும் கதையாக கேப்டன் மில்லர் உருவாகிவருகிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்களான ராக்கி, சாணிக் காயிதம் படங்களை ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்சன் படமாக கேப்டன் மில்லர் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு விருவிருப்பாக நடந்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஒரு நிமிடத்திற்கும் மேலாக இருக்கும் இந்த வீடியோவில் படப்பிடிப்பிற்காக பிரமாண்டமாக செட் போடும் காட்சிகள் உள்ளன. மேலும் வீடியோவின் இறுதியில் கையில் துப்பாக்கி உடன் தனுஷ் ஆவேசமாக இருக்கும் காட்சி உள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular