Saturday, July 27, 2024
HomeTamilநவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம்!!

நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம்!!

இளைஞர், யுவதிகளின் சிறந்த நாளைய தினத்திற்காக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பணிநிறுத்தங்கள் போன்ற பாரம்பரிய அரசியல் முறைகளைத் தாண்டி புதிய அணுகுமுறை மற்றும் புதிய வேலைத்திட்டம் மூலம் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2023 ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் நிதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தற்போது நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது நாட்டின் 77 ஆவது பாதீடு என்பதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படும் முதலாவது பாதீடாகும்.

2023 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டில் அரசாங்கத்தின் செலவீனத்திற்கு 7,885 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

21 ஆம் நூற்றாண்டின் நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணி, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு 5 வருட தவணை அடிப்படையில் கட்டம் கட்டமாக இல்லாதாக்கப்படும்.

அதற்கமைய முன் மொழியப்பட்ட வரியினை நீக்குவது கட்டம் கட்டமாக சரி செய்யப்படுவதற்காக 2023 ஜனவரி 01 இலிருந்து தற்போது அறவிடப்படும் சுங்கத் தீர்வை வீதமான 0%, 10% மற்றும் 15% ஆகிய தீர்வை வீதங்களை 0%, 15% மற்றும் 20% ஆக திருத்தம் செய்கின்றேன்.

இதற்கு சமாந்தரமாக வர்த்தக சரிப்படுத்தல் நிகழ்ச்சித்திட்ட (Trade adjustment programs) அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular