Saturday, July 27, 2024
HomeTamilநாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!!

நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!!

நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நாளையும் (30) நாளை மறுதினமும் (31) செயற்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் கடந்த 4 வாரங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாளாந்தம் 200 முதல் 300 வரையான டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதுடன், ஜனவரி மாதத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது சுற்றுச்சூழல் மற்றும் பொது இடங்களில் நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை அகற்றுவதன் மூலம் டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுக்க முடியும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் 02ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையினால், பாடசாலை சூழலை சுத்தப்படுத்துவதற்காக அதிபர்களின் தலைமையில் வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு பணிப்பாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular