Friday, July 26, 2024
HomeTamilநாளைய தினம் எரிபொருள் விலையில் மாற்றம்!!

நாளைய தினம் எரிபொருள் விலையில் மாற்றம்!!

ஒவ்வொரு மாதத்திலும் முதலாம் திகதி எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் மாற்றம் கொண்டுவரப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று நள்ளிரவு அல்லது நாளைய தினம் எரிபொருள் விலை குறைவடையும் என்ற எதிர்பார்ப்பில், எரிபொருளுக்கான முன்பதிவுகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை குறையும் என்ற நம்பிக்கையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவு செய்வதை தாமதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் சில எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறிருக்க இறுதியாக 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையானது 40 ரூபாவால் குறைக்கப்பட்டு தற்போது 370 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது,டீசல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு தற்போது 415 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular