Saturday, July 27, 2024
HomeTamilபாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை இன்றுடன் (01) முடிவடைவதுடன் மூன்றாம் பாடசாலை தவணை எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 22 திகதி வரை இடம்பெறும்.

பின்னர், எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை இடம்பெறும்.

தொடர்ந்து, ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular