Saturday, July 27, 2024
HomeTamilபுகையிரத நேர அட்டவணைகளை திருத்த நடவடிக்கை!

புகையிரத நேர அட்டவணைகளை திருத்த நடவடிக்கை!

அனைத்து புகையிரத மார்க்கங்களினதும் நேர அட்டவணையை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாகப் பதிவாகும் புகையிரத தாமதத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக புகையிரத பொது முகாமையாளர்​ D.S.குணசிங்க தெரிவித்தார்.

உத்தேச திருத்தத்திற்கு அமைய, ஒவ்வொரு ரயில் சேவை நேரத்திலும் 15 அல்லது 20 நிமிட மாற்றம் ஏற்படலாம் என அவர் கூறினார்.

இந்த திருத்தங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என புகையிரத பொது முகாமையாளர்​ மேலும் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் கரையோர புகையிரத மார்க்க நேர அட்டவணை திருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular