Monday, December 11, 2023
HomeTamilபெண் கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் தொந்தரவு!!

பெண் கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் தொந்தரவு!!

பெண் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் காவல்துறை அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை அக்கரைப்பற்று காவல் நிலையத்தில் கடமையாற்றும் அலுவலர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த காவல்துறை அலுவலர், மகளிர் காவல்துறை கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சியில் ஈடுபடும் மகளிர் காவல்துறை கான்ஸ்டபிள்களுக்கு தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து, குறித்த காவல்துறை அலுவலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular