Sunday, December 10, 2023
HomeTamil"பொருளாதார கொலையாளிகளுக்கு மத்தியில்"

“பொருளாதார கொலையாளிகளுக்கு மத்தியில்”

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் “பொருளாதார கொலையாளிகளுக்கு மத்தியில்” என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ள குறித்த புத்தகம் 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்காக விமர்சிக்கப்பட்ட நபர்களில் ஒருவராக இருக்கும் கப்பரால், “நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என்ன செய்துள்ளார் என்பதை அறிந்து இரவில் நிம்மதியாக உறங்க முடிகிறதா?” என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற முன்றலில் குறித்த கேள்வி எழுப்பப்பட்டதுடன், “என்னால் நன்றாக தூங்க முடிகிறது. மக்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யவில்லை. நான்தான் நாட்டை திவாலாகும் நிலையிலிருந்து காப்பாற்றினேன். மக்கள் எதையும் சொல்லலாம்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular