Saturday, July 27, 2024
HomeTamilபோதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகும் பெண்கள் அதிகரிப்பு!

போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகும் பெண்கள் அதிகரிப்பு!

பெரும்பாலான பெண்கள் அழகு கலை நிலையங்களின் ஊடாக போதைப் பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களிடம் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்று குளியாபிட்டியவில் நேற்று இடம்பெற்றது.

தவறான பொருட்களை வேண்டாம் என்று கூறக்கூடிய நிலையில் பாடசாலை மாணவர்கள் இருக்க வேண்டும் என சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார்.

இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த அவர்,

இதேவேளை, அதிகளவான பெண்களிடம் தற்போது ஐஸ் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது.

குறிப்பாக குருநாகல் மாவட்டத்திலேயே இந்த உயர்வு பதிவாகியுள்ளது. ஆண்களை விடவும் பெண்களுக்கே பாதிப்பு அதிகமாகவுள்ளது.

அழகு கலை நிலையங்களின் ஊடாக இந்த பழக்கத்துக்கு பெண்கள் அடிமையாகின்றனர்.

அடிக்கடி அழகு கலை நிலையங்களுக்கு செல்லும் தங்களது பிள்ளைகள் குறித்து பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular