Saturday, July 27, 2024
HomeTamilமின்வெட்டு நேரம் குறைப்பு

மின்வெட்டு நேரம் குறைப்பு

நாட்டில் நாளைய தினம் 2 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W,M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பிற்பகல் 4 மணிமுதல் 6.30 மணிவரை 40 நிமிடங்களும் 6.30 முதல் 10.30 மணிவரை 1 மணி நேரம் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இணங்க நாளையதினம் பிற்பகல் மின்வெட்டு நேரம் 20 நிமிடங்களால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular