இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச துபாயில் உள்ள தனியார் விலங்கினச்சாலையில் விலங்குகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவர், இலங்கையில் தப்பிச்சென்று, எந்த நாட்டிலும் புகலிடம் கிடைக்காத நிலையில், பின்னர் நாடு திரும்பினார்.
தற்போது அவர், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சைஃப் பெல்ஹாசாவின் ஃபேம் பார்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விஜயம் செய்துள்ளார்.
இதன்போதே அவர் விலங்கு பண்ணை ஒன்றில் விலங்குகளுடன் காட்சிக்கொடுக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
தமது குடும்பத்தினருடன் துபாயில் உல்லாசப்பயணம் மேற்கொண்டுள்ளார்.


