Saturday, July 27, 2024
HomeTamilமெட்டா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!!

மெட்டா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!!

மெட்டா நிறுவனம் ஊழியர்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெட்டா நிறுவனம் 13 சதவீத ஊழியர்களை குறைக்க தயாராகி வருவதாக அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது வரலாற்றில் எடுக்கப்பட்ட மிகவும் கடினமான முடிவு என அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.,

மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சமூக ஊடக வலையமைப்புகளை கொண்டதாகும்.

தற்போது உலகம் முழுவதும் சுமார் 87,000 மெட்டா பணியாளர்கள் உள்ளனர்.

நிறுவனம் எடுத்த இந்த முடிவால் சுமார் 11,000 ஊழியர்கள் வேலை இழப்பர் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, டுவிட்டரில் அதிரடி மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 7 ஆயிரத்து 500 ஊழியர்களில் 50 சதவிகித ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி டுவிட்டர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular