Saturday, July 27, 2024
HomeTamilருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் திட்டம்!

ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் திட்டம்!

ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் ஆபத்தான தஞ்ச கோரிக்கை பயணங்களை நிறுத்தும் என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.

பயணங்களைத் தடுக்கும் கொள்கையாக, பிரான்ஸில் இருந்து சிறிய படகுகளில் வந்த சிலரை ருவாண்டாவில் தஞ்சம் கோர அனுப்ப கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானியா முடிவு செய்தது.

ஆனால், இது புலம்பெயர்ந்தவர்களால் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்று உட்துறை விவகாரக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் டயானா ஜான்சன் கூறினார்.

இந்த திட்டம் ஆபத்தான கடவுகளை நிறுத்தும் என்று அரசாங்கம் கூறியது. ருவாண்டா கொள்கை ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மோசமான மக்கள் கடத்தல்காரர்களை தடுக்க இந்த நடவடிக்கை தேவை என்று கூறினார்.

இருப்பினும், கிழக்கு ஆபிரிக்க நாட்டிற்கு இதுவரை புலம்பெயர்ந்தோர் யாரும் அனுப்பப்படவில்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், 47பேர் ருவாண்டாவுக்குச் அனுப்படுவார்கள் என்று கூறப்பட்டது, ஒரு விமானம் ஜூன் 14ஆம் திகதிக்கு முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் தொடர்ச்சியான சட்ட சவால்கள் மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, விமானம் ரத்து செய்யப்பட்டது.

இந்த ஆண்டு 14,000க்கும் (ஜூலை 11ஆம் திகதி திங்கட்கிழமை மட்டும் 442பேர் உட்பட) மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் சிறிய படகுகளில் கால்வாயைக் கடந்துள்ளனர். மேலும் ருவாண்டா அறிவிப்பு பயனுள்ளதாக இல்லை என்று உட்துறை குழு தெரிவித்துள்ளது.

‘இந்தக் கொள்கையானது புலம்பெயர்ந்தோரைக் கடப்பதைத் தடுக்கும் என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை. ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டதிலிருந்து எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது’ என்று உட்துறை குழு அறிக்கை கூறியது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் சிறிய படகுகளில் ஆங்கிலக் காய்வாயை கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்க ருவாண்டா திட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என அரசாங்கம் கூறுகிறது.

இந்தத் திட்டத்துக்காக இதுவரை 140 மில்லியன் பவுண்ஸ் நிதி ருவாண்டாவிற்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை எந்த ஒரு புகலிடக் கோரிக்கையாளரும் அங்கு அனுப்பப்படாத நிலையில் இன்று இதற்கு நீதிமன்றத்தின் அங்கீகாரம் கிட்டியுள்ளது.

ருவாண்டா திட்டம் ‘தடுப்பு அல்ல எனவும் இந்த திட்டம் சட்டபூர்வமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அரசாங்கம் அதன் ருவாண்டா திட்டத்திற்கு முன்னதாக “பச்சை விளக்கு” திறம்பட வழங்கியது என குடிவரவு வழக்கறிஞர் ஹர்ஜப் பங்கல் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் திட்டங்கள் சட்டவிரோதமாக மக்கள் இங்கிலாந்திற்குள் வருவதைத் தடுக்கும் என்று தான் நம்பவில்லை என தெரிவித்தார்.

“மனித உரிமை அமைப்புகள் அதற்கு முன்னோக்கி செல்லும் வரை, அது இங்கிலாந்து அரசாங்கமோ அல்லது ருவாண்டா அரசாங்கமோ கூறுவது போல் பாதுகாப்பானது அல்ல என்று கருதலாம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, புகலிட அமைப்பில் உள்ள “பிரச்சினைகளை வரிசைப்படுத்துவதற்கு பதிலாக, செயல்படுத்த முடியாத, நெறிமுறையற்ற, மிகவும் பெருமதியான ருவாண்டா திட்டத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது என உள்துறை செயலாளர் யவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.

லிபரல் டெமாக்ரக்ட் எம்பி கிறிஸ்டின் ஜார்டின் கடத்தல் கும்பலைக் கையாள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும், அத்துடன் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான வழிகளை வழங்க வேண்டும் என்றார்.

திட்டங்களின் செலவுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன், இந்தத் திட்டம் ஒரு “நீண்ட காலக் கொள்கை” என்றும், செலவுகள் இறுதியில் இடம்பெயர்ந்த மொத்த எண்ணிக்கையைப் பொறுத்தது என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியர்கள் “கட்டுப்படுத்தப்பட்ட குடியேற்றத்தை ஆதரிப்பதாக” உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேன் கூறியுள்ளார். அவர்களில் பலர் அகதிகளுக்கு தங்கள் வீடுகளைத் திறந்துள்ளதாகவும் ஆனால், “அவர்கள் திறந்த எல்லைகளை விரும்பவில்லை” என்று அவர் கூறுகிறார்.

சட்டவிரோதமாக இங்கு வருபவர்களை நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாது என பிரேவர்மேன் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular