Friday, July 26, 2024
HomeTamilவருமானத்திற்கு ஏற்ப வரி அறவிடப்படும் விதம்!

வருமானத்திற்கு ஏற்ப வரி அறவிடப்படும் விதம்!

எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதி நிதியமைச்சு அறிவித்துள்ளது.

சகல சீர்திருத்தங்களையும் முன்னெடுப்பதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் என அரசாங்க நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கபில சேனாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்.

சம்பள வகைகளுக்கு ஏற்ப தனிநபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வேதனத்தை பெறுபவரிடம் 3,500 ரூபா வரியாக அறவிடப்படவுள்ளது.

2 இலட்சம் ரூபா வேதனத்தை பெறுபவரிடம் 10,500 ரூபாவும், 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வருமானத்தை பெறும் நபரிடம் 21 ஆயிரம் ரூபாவும், வருமான வரியாக அறவிடப்படவுள்ளது.

அத்துடன், 3 இலட்சம் ரூபா மாதாந்த வேதனத்தை பெறும் நபரிடம் 35 ஆயிரம் ரூபா வரியாக அறவிடப்படவுள்ளதுடன், 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வேதனத்தை ஈட்டுபவர் 52 ஆயிரத்து 500 ரூபாவை வருமான வரியாக செலுத்த வேண்டும்.

இதுதவிர, 4 இலட்சம் ரூபா வேதனத்தை பெறுபவர் 70,500 ரூபாவும், 5 இலட்சம் ரூபா வருமானம் பெறும் நபர் 1 இலட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாவையும் வருமான வரியாக செலுத்த வேண்டும்.

7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வருமானம் பெறும் நபர் ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 500 ரூபாவும், 10 இலட்சம் ரூபா வருமானம் பெறுபவர் 2 இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபா வருமான வரியாக செலுத்த நேரிடும்.

எவ்வாறாயினும் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த வேதனத்தை பெறும் தனிநபருக்கு இந்த வருமான வரி விதிப்பு தாக்கம் செலுத்தாது என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் வர்த்தக நிறுவன வருமான வரியிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நிலையான, சிறிய மற்றும் நடுத்தர, தொழில் முயற்சி, ஏற்றுமதி பொருட்கள், தகவல் தொழிநுட்பம், கல்வி, சுற்றுலா, சுகாதாரம், நிர்மாணம், உற்பத்தி என்பனவற்றுக்கு 30 சதவீதம் வரி அறவிடப்படவுள்ளது.

எவ்வாறியினும், ஏற்றுமதி சேவைகளுக்கு வர்த்தக நிறுவன வருமான வரி தாக்கம் செலுத்தாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular