Saturday, July 27, 2024
HomeTamilவளி மாசு: முகக்கவசம் அணிய கோரிக்கை!

வளி மாசு: முகக்கவசம் அணிய கோரிக்கை!

அதிகளவு வளி மாசடைவதால் அவதானமாக இருக்குமாறு சுற்றாடல் அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

நாட்டில் இந்நாட்களில் காணப்படும் மூடுபனி அல்லது பனி இயற்கையான நிகழ்வு அல்ல, ஏனெனில் இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.

அசுத்தமான காற்றை இந்தியாவிலிருந்து வீசும் காற்று காரணமாக இப்பகுதி காற்று தரக் குறியீட்டில் (AQI) 200க்கு மேல் பதிவு செய்து வருகிறது.

கொழும்பு, கண்டி, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள சுவாசம் மற்றும் இதய நோய்கள் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளின் தங்கள் உடல் நலத்தை பாதுகாக்க முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

AQI சுட்டெண் யாழ்ப்பாணத்தில் 212 ஆகவும், கம்பஹாவில் 189 ஆகவும், தம்புள்ளையில் 170 ஆகவும், கொழும்பில் 169 ஆகவும், கண்டி 161 ஆகவும், நீர்கொழும்பில் 170 ஆகவும், அம்பலாந்தோட்டையில் 157 ஆகவும் இருந்தது.

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக காற்று மாசுபாட்டை கண்காணிக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular