Saturday, July 27, 2024
HomeTamil13 ஆம் திருத்தத்துக்கு எதிராக பௌத்த தேரர்கள் இணைந்து போராட்டம் - பாராளுமன்றத்துக்கு வெளியே பதற்றம்!!

13 ஆம் திருத்தத்துக்கு எதிராக பௌத்த தேரர்கள் இணைந்து போராட்டம் – பாராளுமன்றத்துக்கு வெளியே பதற்றம்!!

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கொழும்பில் தற்போது பௌத்த தேரர்கள் இணைந்து போராட்டம் முன்னெடுத்து வருகின்றனர்.

பாராளுமன்றத்துக்கு வெளியே பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பெரும் திரளான பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெரே அடிக்கப்படுகின்றது. “இது எங்களுடைய நாடு காணியை யாருக்கும் கொடுக்கமாட்டோம்” என்ற எழுதப்பட்ட பதாகையை தாங்கியவாறே முன்​னோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

பாராளுமன்ற வளாகத்தினுள் பிரவேசிப்பதற்கு தேரர்களும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் காவல்துறையினருடன் முறுகலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட பலர் வெலிக்கடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

காவல்துறையினருக்கும், தேரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து தேரர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் “தேரர்கள் மீது கை வைக்க வேண்டாம், அவர்களுக்கான மரியாதையை வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கொட்டகலை பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, அதன் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு, சகல உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரவை வழங்கியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular