Saturday, July 27, 2024
HomeTamil65 நகரங்களில் 4,000 யாசகர்கள்

65 நகரங்களில் 4,000 யாசகர்கள்

நாட்டின் 65 நகரங்களில் மட்டும் 3,000 முதல் 4,000 பிச்சைக்காரர்கள் இருப்பதாக தேசிய சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

24 மாநகர சபை பிரிவுகள் மற்றும் 41 நகர சபை பிரிவுகளில் நான்கு நாட்களாக நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு குறித்து, தேசிய சமூக மேம்பாட்டு நிறுவனம், பெண்கள், குழந்தைகள் விவகாரம் மற்றும் சமூக அதிகாரமளித்தல் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவிடம் தகவல்களை தெரிவித்துள்ளது .

பெண் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் தொடர்பான அமைச்சுகளின் ஆலோசனைக் குழு, குழந்தைகள் , சிறுவர்கள் பிச்சை எடுப்பதைத் தடுக்கும் பொறிமுறையைத் தயாரிக்க சிறப்புக் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளது.

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமானால் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு தலையிடுவது குறித்தும் குழு கவனம் செலுத்தியது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பெண்கள் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவு உட்பட பங்குதாரர்களைக் கொண்ட இந்த விசேட குழுவை ஒருங்கிணைக்கும் பணி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு வழங்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பெண்கள் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான அமைச்சு ஆலோசனைக் குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களை பிச்சையெடுக்கும் தொழிலாக பயன்படுத்துவது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், சிறுவர்களை பிச்சை எடுப்பது முற்றாக நிறுத்தப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.

நகரில் பிச்சைக்காரர்கள் கணக்கெடுப்பு தரவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது, இதுவரை தெரிவிக்கப்பட்ட தரவுகளின்படி, 3,000 முதல் 4,000 பிச்சைக்காரர்கள் உள்ளனர் மற்றும் தரவுகளை சேகரித்த பிறகு, பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்கள் திரட்டப்படும் என தேசிய சமூக மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular