Saturday, July 27, 2024
HomeTamil50 வருடங்களுக்குப்பின் பனியில் உறைந்தது நயாகரா நீர்வீழ்ச்சி!!

50 வருடங்களுக்குப்பின் பனியில் உறைந்தது நயாகரா நீர்வீழ்ச்சி!!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனி சூறாவளியால் மேலும் சுமார் 50 வருடங்களுக்குப்பின் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் பனியில் உறைந்து போய் காணப்படுகின்றது.

அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாக பனி சூறாவளி வீசுகிறது. நாடு முழுவதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன. மின்சாரம் தடைபட்டுள்ளது.

போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பனி சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஐ தாண்டி உள்ளது. பனிப்பொழிவு காரணமாக பலர் வாகனங்களிலேயே சிக்கி உயிரிழந்துள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஐந்து தசாப்தங்களில் அமெரிக்காவை தாக்கிய மிக மோசமான பனிப்புயல் இதுவாகும்.

இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஒவ்வொரு வினாடிக்கும் 3,160 டன் அளவுக்கு அதிக அளவு தண்ணீர் வரும் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் உறைந்து போய் காணப்படுகிறது.

சில இடங்களில் மட்டும், நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகளும், வீடியோக்களும் வெளியாகி உள்ளது.

நியூயோர்க் மாநிலத்தில் வீசிய பனிப்புயல் 50 ஆண்டுகளில் மாநிலத்தில் தாக்கிய மிக மோசமான பனிப்புயல் என்று நம்பப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular