Friday, July 26, 2024
HomeTamil74 மண்ணெண்ணெய் பவுசர்கள் விடுவிப்பு

74 மண்ணெண்ணெய் பவுசர்கள் விடுவிப்பு

மண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற தாமதத்தை எதிர்வரும் இரண்டு நாட்களில் முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


அதன்படி, மீனவர்களுக்கான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 74 மண்ணெண்ணெய் தாங்கிகள் இன்று (23) விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரப் பிரிவு) கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

இதற்கமைய, 49 தனியார் துறை எரிபொருள் நிரப்பு நிலையங்கள், 18 கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் மேலும் 7 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனுமதி வழங்கப்பட்டிருந்தும் பணம் செலுத்தாத காரணத்தால் நேற்று (22) மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படாத அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இன்று (23) மண்ணெண்ணெய் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இதுவரை மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படாத 18 கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாகாண கூட்டுறவு ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் பரிந்துரையின் பேரில் இதற்கு தேவையான நிதி வசதிகள் கூட்டுறவு கிராமிய வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீனவ மக்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பான மேற்பார்வை மற்றும் முகாமைத்துவம் மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு நேற்று (22) முதல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் நாளை (24) முதல் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் கீர்த்தி தென்னகோன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular