Saturday, July 27, 2024
HomeTamilயாழில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

யாழில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதி ஒன்றிலிருந்து நேற்று(18) ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

சடலத்திற்கு அருகில் மூன்று வகையான போதைப்பொருள் உள்ளிட்ட சில உபகரணங்களும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொக்குவில் தெற்கு, தாவடி பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் பவிசன் என்ற 25 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரின் நண்பர் எனவும், அவர் அடிக்கடி இந்த விடுதிக்கு சென்று வருவதும் தெரியவந்துள்ளது. இதன்காரணமாக பாதுகாப்பு உத்தியோகத்தர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular