வீதி ஓரங்களில் விழும் அபாய நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனடிப்படையில், சுற்றாடல் அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரிகளை ஒருங்கிணைத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் இன்று (06) காலை பஸ் மீது மரம் முறிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில் பதிலளித்த இராஜாங்க அமைச்சர், உடனடியாக அனர்த்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், வீதிகளின் இருபுறங்களிலும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றுமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
