Saturday, July 27, 2024
HomeTamilதன்பாலின தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்க அனுமதி!!

தன்பாலின தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்க அனுமதி!!

தன்பாலின தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்குவதற்கு போப் பிரான்சிஸ் முறைப்படி அனுமதி அளித்துள்ளார்.

வாட்டிகனின் கொள்கையில் மாற்றங்கள் என்ற புதிய ஆவணத்தில், கடவுளின் அன்பையும், கருணையையும் பெற விரும்பும் மக்களை தடுக்கக் கூடாது என்ற நோக்கில் தன்பாலின தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்குவதற்கு போப் பிரான்சிஸ் முறைப்படி அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்டிகன் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட இந்த ஆவணத்தில், “திருமணத்தில் சில சடங்குகளைக் குழப்பாமல் இருந்தால் தன்பாலின தம்பதிகளுக்கு பாதிரியார்கள் ஆசீர்வாதம் வழங்கலாம் என்று கூறியுள்ளார்.

திருமணம் என்பது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான வாழ்நாள் ஒப்பந்தம் என்று விளக்கமாக அந்த ஆவணம் வலியுறுத்துகிறது. இருப்பினும் தன்பாலின தம்பதிகள் கடவுளின் ஆசீர்வாதத்தைக் கோரினால் அதனை முழுமையாக மறுத்துவிடக் கூடாது என்றும் கூறுகிறது.

இறுதியாக, ஆசீர்வாதமானது மக்களுக்கு கடவுளின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கக் கூடியது. கடவுளின் அன்பு மற்றும் கருணையைப் பெறுவதற்காக ஆசீர்வாதம் கோருபவர்களை நாம் தடுத்து நிறுத்தக் கூடாது. மாறாக அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular