Saturday, July 27, 2024
HomeTamilபூமி மீது 2046-ம் ஆண்டு மோதப்போகும் புதிய விண்கல்

பூமி மீது 2046-ம் ஆண்டு மோதப்போகும் புதிய விண்கல்

விண்வெளியில் புதிதாக விண்கல் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பூமி மீது 2046ம் ஆண்டு மோத வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

2 சூரிய குடும்பம் உருவான போது கோளாக உருவாகாமல் நின்று போன சிறிய பாறைப்பொருட்கள் தான் சிறுகோள் அல்லது விண்கல் என அழைக்கப்படுகின்றன.

சூரிய குடும்பத்துக்கு வெளியே பல விண்கல் சுற்றி வருகின்றன. இவை அவற்றைப்பாதிக்கும் ஈர்ப்பு சக்தியால் பூமியை நோக்கி வருகின்றன. பெரும்பாலான விண்கல் பூமிக்கு அருகே பாதுகாப்பாக கடந்து விடும். அரிதாக மட்டுமே பூமியை தாக்கும் வாய்ப்பு அமையும். இதுவரை 30 ஆயிரம் விண்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வரும் 2046 பிப்ரவரி மாதம் 14ம் திகதி ‘2023 டி.டபிள்யு’ என்ற விண்கல் பூமியை தாக்கும் வாய்ப்புள்ளதாக நாசா கணித்துள்ளது.

கண்டறியப்பட்ட இந்த விண்கலின் விட்டம் 165 அடி. இது மணிக்கு 24.64 கி.மீ., வேகத்தில் சுற்றுகிறது. இது, தன் சுற்றுப்பாதையை ஒரு முறை சுற்றி முடிக்க 271 நாட்கள் ஆகும்.

இந்த விண்கல் இந்திய பெருங்கடல் – பசிபிக் கடல், அமெரிக்காவின் மேற்கு – கிழக்கு கடற்கரை பகுதிகள் – லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டன் உள்ளிட்ட நகரம் – உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் விழுவதற்கு ‘560க்கு ஒன்று’ என்ற விகிதத்தில் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விண்கல் என்பதால் அதன் சுற்றுப்பாதையை கணிப்பதற்கு நீண்ட நாட்கள் தேவை என்பதால், எதிர்காலத்தில் இது பூமியை தாக்கும் வாய்ப்பு இல்லாமலும் போகலாம்.

பூமியை தாக்கும் என கணிக்கப்படும் விண்கல்லை, விண்கலம் மூலம் தாக்கி, அதன் திசையை மாற்றும் ‘டார்ட்’ திட்டம் கடந்தாண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதுவும்விஞ்ஞானிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular