Saturday, July 27, 2024
HomeTamilமும்பை அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்கு மும்பை!!

மும்பை அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்கு மும்பை!!

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய 54வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, பெங்களூரு தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளசிஸ், விராட் கோலி களமிறங்கினர். 4 பந்தில் 1 ரன் எடுத்திருந்த விராட் கோலி முதல் ஓவரிலேயே அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து வந்த அனுஜ் ராவத் 6 ரன்னில் அவுட் ஆனார். இதனால், பெங்களூரு 2.2 ஓவரில் 16 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து, களமிறங்கிய மேக்ஸ்வெல் கேப்டன் டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் உள்பட 68 ரன்கள் குவித்த மேக்ஸ்வேல் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய லுமூர் 1 ரன்னில் அவுட் ஆனார். ஆனால், மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் டு பிளசிஸ் 41 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 65 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சர் உள்பட 30 ரன் எடுத்து அவுட் ஆனார்.

இறுதியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. கேதார் ஜாதவ் 12 ரன்களுடனும், ஹசரங்கா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மும்பை அணியின் ஜேசன் பெஹ்ரெட்ன்ரொப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்க உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular