Saturday, July 27, 2024
HomeTamilமக்களுக்காக குரல் எழுப்புவதை தடுக்க முடியாது- சஜித்

மக்களுக்காக குரல் எழுப்புவதை தடுக்க முடியாது- சஜித்

மக்கள் பணத்தால் நிர்வகிக்கப்படும் மக்கள் பிரதிநிதியாக, மக்களுக்காக குரல் எழுப்புவது தனது கடமை என்றும், அதனை தடுக்க ஜனாதிபதிக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ அல்லது தரப்புக்கோ முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொள்கை திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் துறையில் பல ஆண்டுகளாக அநீதி இழைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கும் போது தேவையற்ற கேள்விகளை கேட்டு பாராளுமன்றத்தில் நேரத்தையும் பணத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் வீணடிப்பதாக மொட்டுக் கட்சியின் எம்.பிக்கள் குழு ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக இரு அரச பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அவ்வாறானதொரு கருத்து வெளியிடப்பட்டிருந்தால் அது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும், மொட்டு எம்.பிக்களும் தமது கடமையை சரியாகச் செய்வதை ஏற்றுக்கொண்டமையே மகிழ்ச்சிக்குக் காரணம் எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்கள் பிரச்சினைகளை சட்டவாக்கத்துறையில் முன்வைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதையே தாம் செய்வதாக குறிப்பிட்டார்.

மக்களின் பணத்தில் சம்பளம் மற்றும் சேவை வசதிகள் மற்றும் பல்வேறு சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பெறும் மக்கள் பிரதிநிதிகளின் பணி இதுவாகவே இருக்க வேண்டும் என்றும், தாம் தனிப்பட்ட கேள்விகளைக் கேட்கவில்லை என்றும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தான் எப்போதும் முன்வைப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மக்கள் பணத்தால் நிர்வகிக்கப்படும் மக்கள் பிரதிநிதியாக, மக்களுக்காக குரல் எழுப்புவது தனது கடமை என்றும், அதனை தடுக்க ஜனாதிபதிக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ அல்லது தரப்புக்கோ முடியாது எனவும், அதனை நிறுத்த இடமளிக்கப் போவதில்லை என்றார்.

குறித்த சந்திப்பில், திட்டமிடல் துறையில் உயர் தரம் 2 (2) வகைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் போது சேவை சாசனத்தை மீறி,வர்த்தமானி வெளியிட்டமை குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

ஆட்சேர்ப்புச் செய்யும் போது வர்த்தமானியில் பெயர் இல்லாத குறிப்பிட்ட பிரிவினருக்கு நியமனம் வழங்கி, வேறு பிரிவினருக்கு நியமனம் வழங்காமல் விட்டும் ஆட்சேர்ப்பில் இடம் பெற்ற அநீதிகள் குறித்தும் தெரியப்படுத்தினர்.

இந்த அநீதி தொடர்பில் விரைவில் பாராளுமன்றத்தில் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular