Sunday, December 10, 2023
HomeTamilமகிழுந்து 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!!

மகிழுந்து 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!!

பசறை 13 ஆம் கட்டை பகுதியில் மகிழுந்து ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (20) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

ஹொப்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றும் குறித்த நபர் இன்று காலை பாடசாலைக்கு செல்ல தயாராகி தனது மகிழுந்தை வீட்டிலிருந்து வெளியே செலுத்திய வேளையில், அது அருகிலிருந்த பள்ளத்தின் ஊடாக பசறை-பிபிலை பிரதான வீதியில் விழுந்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பசறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பசறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மூன்று வருடங்களுக்கு முன் இதே பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular