Saturday, July 27, 2024
HomeTamilவியாழன் கிரகத்தில் காந்தபுலத்தால் நிறங்கள் மாறுகின்றன- விஞ்ஞானிகள் தகவல்!!

வியாழன் கிரகத்தில் காந்தபுலத்தால் நிறங்கள் மாறுகின்றன- விஞ்ஞானிகள் தகவல்!!

சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோளாக வியாழன் உள்ளது. பூமியை போல் 1300 மடங்கு பெரியதாகும். வியாழன் ஒரு வாயுக்கோள் ஆகும். இதன் வளிமண்டலம் பெறும்பாலும் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களால் ஆனது. இதைச்சுற்றி தூசித் துகள்களால் ஆன வளையங்கள் உள்ளன.

வியாழன் கிரகத்தில் நிறங்கள் அடிக்கடி மாறி வருகின்றன. நகரும் மற்றும் மாறக்கூடிய வண்ணங்களின் பட்டைகளை விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

வியாழன் கிரகத்தில் மாறி வரும் கோடுக்கான காரணம் குறித்து தீவிர ஆராய்ச்சிகள் நடந்தன.

இந்த நிலையில் இங்கிலாந்தின் சீட்ஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த வானியலாளர்கள் தெரிவிக்கும் போது,

வியாழன் கிரகத்தின் காந்த புலத்தில் அதன் உட்புறத்தில் ஆழமாக உற்பத்தி செய்யப்படும் அலைகளால் நிறங்கள் மாறுபாடு ஏற்படலாம். இது கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் கீழே நிகழ்கிறது. ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கும் நிறங்கள் மாறுகின்றன. கோடுகளின் நிறங்கள் மாறலாம் அல்லது சில நேரங்களில் முழு வானிலை முறையும் சிறிது சிறிதாக மாறுகிறது. அது ஏன் ஒளி நிகழ்கிறது என்பது மர்மமாக உள்ளது.

பூமிக்கு நிலஅதிர்வியல் மற்றும் சூரியனுக்கும் ஹீரியோ சிஸ்மலாஹி செய்வது போல், வியாழனில் மறைந்திருக்கும் ஆழமான உட்புறத்தை ஆய்வு செய்ய முடியும் என்று நம்புகிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular