Friday, July 26, 2024
HomeTamilஎரிவாயு விலை குறைப்பு!!

எரிவாயு விலை குறைப்பு!!

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (காஸ்) விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைந்துள்ளன.

இதன்படி, 19 கிலோகிராம் எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை சென்னையில் இன்று (ஆகஸ்ட் 1) முதல் ரூ.1,852.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திலும் வரிகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளில் குறைந்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular