Saturday, July 27, 2024
HomeTamil"எலான் மஸ்காகவே இருந்தாலும் குற்றம் குற்றமே" - ரிஷி சுனக்!!

“எலான் மஸ்காகவே இருந்தாலும் குற்றம் குற்றமே” – ரிஷி சுனக்!!

அக்டோபர் 7 அன்று துவங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், 50 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகெங்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாக பலரும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக பலரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் பிரபல சமூக கருத்து பரிமாற்றல் இணைய வலைதளமான “எக்ஸ்” செயலியில், ஒரு பயனர், “வெள்ளையர்களுக்கு எதிராக யூதர்கள் வெறுப்பை தூண்டி விடுகிறார்கள்” என கருத்து பதிவிட்டிருந்தார்.

எக்ஸ் வலைதளத்தின் தற்போதைய நிறுவனரும், உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், இக்கருத்தை ஆமோதிக்கும் வகையில், “நீங்கள் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்”, என பதிலளித்து பதிவிட்டிருந்தார்.


இது உலகெங்கும் உள்ள யூதர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க வெள்ளை மாளிகை எலான் மஸ்க் கூறுவதை “வடிகட்டிய பொய்” எனவும் விமர்சித்திருந்தது.

எலான் மஸ்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல பன்னாட்டு நிறுவனங்கள் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு வந்த தங்கள் விளம்பரங்களை குறைத்து கொள்ள தொடங்கின. இதனால் எக்ஸ் நிறுவன விளம்பர வருவாயும் குறைய தொடங்கியது. இவ்வருட இறுதிக்குள் அது பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

இங்கிலாந்தில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல முக்கிய பிரமுகர்களும், பல்லாயிரக்கணக்கானோரும் பங்கேற்ற யூத எதிர்ப்பிற்கு எதிரான பேரணி ஒன்று நடைபெற்றது.

இங்கிலாந்தில் நவம்பர் மாத தொடக்கத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த மாநாட்டில் எலான் மஸ்க் மற்றும் ரிஷி சுனக் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்பின்னணியில், தனது நிலைப்பாட்டை குறித்து ரிஷி சுனக் கருத்து தெரிவிக்க வேண்டும் என அந்நாட்டில் அவருக்கு ஊடகங்களில் அழுத்தம் தரப்பட்டு வந்தது.

இதை தொடர்ந்து ஒரு பேட்டியில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இது குறித்து கருத்து தெரிவித்தார்.

அதில் அவர் தெரிவிக்கையில்,

என்னுடன் பழகும் ஒவ்வொரு மனிதரும் கூறும் கருத்துக்களையும் ஆராயும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால், யூதர்களுக்கு எதிரான வெறியையும், வன்முறை சம்பவங்களையும், அவர்களுக்கு எதிரான சித்தாந்தத்தையும் நான் எதிர்க்கிறேன். நீங்கள் சாலையில் செல்லும் யாரோ ஒருவரா அல்லது எலான் மஸ்கா என்பது குறித்தெல்லாம் எனக்கு கவலையில்லை. தகாத வார்த்தைகளால் பொய்யாக விமர்சிப்பது அனைத்து வகையிலுமே ஏற்க முடியாதது. எல்லா வகையிலுமே யூத எதிர்ப்பு என்பது முழுவதும் தவறு என சுனக் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular