Friday, July 26, 2024
HomeTamilகுடிநீர் விநியோகத்தில் நெருக்கடி!!

குடிநீர் விநியோகத்தில் நெருக்கடி!!

நிலவும் மழையற்ற காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்றைய நீர் மின் உற்பத்தி 11 வீதமாக குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக மின்சார பாவனை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு வார நாளில் வழக்கமாக 43 முதல் 44 ஜிகாவாட் மணிநேரமாக இருந்த மின் நுகர்வு தற்போது சுமார் 51 ஜிகாவாட் மணிநேரமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த தொகையில், தலா 4 ஜிகாவாட் மணிநேரம் காற்று மற்றும் சூரிய சக்தி மூலம் சந்திக்கப்படுகிறது. எஞ்சிய 35 ஜிகாவாட் மணிநேரத்தை அனல் மின் நிலையங்கள் பூர்த்தி செய்யும் என இங்கு தெரிவிக்கப்பட்டது. மின்சார சபைக்கு சொந்தமான நீர்த்தேக்கங்களில் நீர் வழங்கல் சபையின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நீர் முகாமைத்துவம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீர் மின்சார உற்பத்தியை அதிகரித்தால் கொழும்பு, கண்டி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு குடிநீரை வழங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular