Friday, July 26, 2024
HomeTamilADB அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சர் இடையே கலந்துரையாடல்!!

ADB அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சர் இடையே கலந்துரையாடல்!!

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிறைவேற்று பணிப்பாளர் சங்மின் ரியுவுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடியுள்ளார்.

சியோலில் நடைபெறும் 56ஆவது ADB வருடாந்த கூட்டத்தின் ஒருபுறம் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் நிதியமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

ADB மற்றும் தென் கொரியாவும் E-Asia நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு தமது ஆதரவை வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular