Saturday, July 27, 2024
HomeTamilடுவிட்டரில் புதிய விதிகளை அறிவித்த எலான் மஸ்க்!

டுவிட்டரில் புதிய விதிகளை அறிவித்த எலான் மஸ்க்!

டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் வெரிஃபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே For You பிரிவில் பரிந்துரை செய்யப்படும் என அறிவித்தார்.

இதன் மூலம் AI பாட்கள் தளத்தில் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க முடியும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

“ஏப்ரல் 15 ஆம் திகதி முதல், வெரிஃபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும். இது தான் AI பாட்கள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் உண்மையான வழியாக இருக்கும். இதைதவிர மற்ற நடவடிக்கைகள் தோல்வியிலேயே முடியும். வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளவும் வெரிஃபிகேஷன் பெற்றிருக்க வேண்டும்,” என எலான் மஸ்க் டுவிட் செய்திருக்கிறார்.

அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பிறப்பிக்கும் ரோபோட் டெஸ்டில் இருந்து விடுபட செய்யும் ஒரே வழிமுறை கட்டண சமூக வலைதள அக்கவுண்ட்கள் தான் என எலான் மஸ்க் முன்னதாக தெரிவித்து இருந்தார். தற்போதைய அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எவ்விதமான ரோபோட் டெஸ்டிங்கையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு விடுகின்றன.

முன்னதாக ஏப்ரல் 1, 2023 முதல் டுவிட்டரில் அக்கவுண்ட்களை வெரிஃபை செய்யும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. டுவிட்டர் புளூ சந்தா நடைமுறைக்கு வரும் முன் தங்களின் அக்கவுண்ட்களை வெரிஃபைடு செய்து புளூ டிக் பெற்றவர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புளூ டிக் நீக்கப்படும் என டுவிட்டர் அறிவித்து இருந்தது.

உலகளவில் டுவிட்டர் புளூ வெளியானதை அடுத்து டுவிட்டர் நிறுவனம் தனது பழைய வெரிஃபைடு திட்டத்தை நிறுத்த இருக்கிறது.

பழைய வழக்கப்படி டுவிட்டர் பயனர்களின் ஐடி மற்றும் பொது மக்கள் இடையே பிரபலமாக இருப்போருக்கு மட்டும் குறிப்பிட்ட வழிமுறைகளின் கீழ் வெரிஃபைடு அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular