Friday, July 26, 2024
HomeTamilஎரிவாயு விலை குறைப்பு!!

எரிவாயு விலை குறைப்பு!!

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை இன்று (3) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அதற்கமைய, லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு கொள்கலன் விலை 100 ரூபாவினாலும், 5 கிலோவின் விலை 40 ரூபாவினாலும், 2.3 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 19 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, 12 கிலோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 3638 ரூபாகவும், 5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 1462 ரூபாவாகவும், 2.3 கிலோ எரிவாயுவின் விலை 681 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், லாஃப்ஸ் சமையல் எரிவாயு விநியோக நிறுவனம் அதன் விலைகளை அதிகரிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular