Saturday, July 27, 2024
HomeTamilகிராஃபைட் ஏற்றுமதி - சீன கட்டுப்பாடு!!

கிராஃபைட் ஏற்றுமதி – சீன கட்டுப்பாடு!!

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு அவசிய தேவையான செமிகண்டக்டர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா பலவித கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

இத்துறையில் சீனா நுழைவதை தடுக்கும் விதமாக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, மின்சார வாகனங்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான ‘கிராஃபைட்’, தன் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு செல்வதை தடுக்கும் விதமாக, சீனா, அதன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

“தேசிய பாதுகாப்பு மற்றும் தேச நலனுக்காக 2 வகையான கிராஃபைட்களை ஏற்றுமதி செய்ய சீன ஏற்றுமதியாளர்கள் இனி அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும்.

இந்த கொள்கை மாற்றம் எந்த குறிப்பிட்ட தேசத்தையும் குறி வைத்து கொண்டு வரப்படவில்லை” என சீனாவின் வர்த்தக துறை அறிவித்துள்ளது.

அரசு அனுமதியை கோரும் போது எந்த நாடுகளுக்கு அவை செல்கின்றன என்பதை சீனா தீவிரமாக கண்காணிக்க முடியும்.

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகன உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. அவற்றில் உள்ள பேட்டரிகளுக்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான கிராஃபைட்டின் உற்பத்தி தன் வசம் உள்ளதால் சீனா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

உலகிற்கு தேவைப்படும் கிராஃபைட் உற்பத்தியில் 65 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு சீனாவிலிருந்துதான் கிடைக்கிறது.

வேறு நாடுகளில் கிராஃபைட் கிடைக்கும் வரை சீனாவின் இந்த நடவடிக்கை கண்டிப்பாக மாற்று எரிசக்தி துறையில் அந்நாட்டின் ஆதிக்கம் அதிகரிக்கவே வழி செய்யும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular