Friday, July 26, 2024
HomeTamilஉள்ளூராட்சித் தேர்தலில் I.F.M தலையிடாது!

உள்ளூராட்சித் தேர்தலில் I.F.M தலையிடாது!

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனில் முதல் தவணை இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கப் பெறும் என அதன் இலங்கைக்கான பிரதானி மசாஹிரோ நொசாகி தெரிவித்துள்ளார்.

லண்டனில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சித் தேர்தல் நடைமுறைகளில் சர்வதேச நாணய நிதியம் தலையிடாது.

இதுதவிர, இலங்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் சிபாரிசு செய்யவில்லை என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி மசாஹிரோ நொசாகி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது கொடுப்பனவை ரூபாவாக மாற்றலாம் என்றும், அரசாங்கக் கடன்கள் மற்றும் பிற செலவினங்களைத் திருப்பிச் செலுத்த அந்த நிதியைப் பயன்படுத்தலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளார்.

முற்போக்கான முறையில் வரி வசூலிக்கப்பட வேண்டும். இறக்குமதியை கட்டுப்படுத்தும் முறைமை நீக்கப்பட வேண்டும்.

அத்துடன், சந்தையில் இருந்து 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்வதன் மூலம் நாட்டின் கையிருப்பை அதிகரிக்க மத்திய வங்கி உதவும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கை பெற்றுக் கொண்ட கடன்கள் மற்றும் நிலுவையில் உள்ள கடன்களைத் செலுத்துவதற்கு 4 முதல் 10 ஆண்டுகள் வரை கால அவகாசம் இலங்கைக்கு கிடைக்க பெறும் என அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular