Saturday, July 27, 2024
HomeTamilரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

இந்த வருடத்தில் கடந்த 19 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 18.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த காலகட்டத்தில், இலங்கை ரூபா பெறுமதி பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.

Dollar-Rupee

அதன்படி, 2023 மே 19 வரையான காலப்பகுதியில் ஜப்பானிய யென்னுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 24.1% ஆகவும், ஸ்டெர்லிங் பவுண்டுடன் ஒப்பிடும்போது 15.4% ஆகவும், யூரோ நாணயத்துடன் ஒப்பிடும்போது 17.5% ஆகவும், இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது 18.7% ஆகவும் உயர்ந்துள்ளது அத்துடன், 2022 இல், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 44.8 வீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular