Saturday, July 27, 2024
HomeTamilசர்வதேச தரத்திற்கு இணையான கல்வி!!

சர்வதேச தரத்திற்கு இணையான கல்வி!!

சர்வதேச தரத்திற்கு இணையாக இந்நாட்டின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் முயற்சியில் சில முடிவு எடுக்கப்பட்டதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி 2024 ஆம் ஆண்டிலிருந்து தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய இரு புதிய பாடங்களை இலங்கை பாடத்திட்டத்தில் அறிமுகப் படுத்தவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

3d rendering robot learning or machine learning with education hud interface

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 6 முதல் 13 வரை குறித்த பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளன.

இவ்வருடம் ஜூன் மாதம் இதற்கான முன்னோடி நிகழ்வுகள் தெரிவு செய்யப்பட்ட 20 பாடசாலைகளில் நடைபெறும் எனவும் மாணவ சமுதாயத்திற்குள் ஆங்கில மொழிப்பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

‘STEAM’ கல்வி முறையைச் செயல்படுத்துவதன் மூலம் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வுகளுக்கு பதிலாக தொகுதி அடிப்படையிலான முறையைப் பின்பற்ற முடியும். அதன்மூலம் அவர்கள் சிறந்த செயல்திறனைக் காட்ட முடியும்.

இந்த ‘STEAM’ கல்வி முறையைச் செயற்பாட்டின் மூலம் புத்தகங்களில் பாடமாக கற்பவற்றை வகுப்பறைக்கு வெளியிலும் நடைமுறை வாழ்வில் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என அமைச்சர் விளக்கினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular