Saturday, July 27, 2024
HomeTamilஜவானுக்கு கிடைத்த பெருமை!!

ஜவானுக்கு கிடைத்த பெருமை!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மும்பையின் புகழ்பெற்ற கெயிட்டி கேலக்ஸி (Gaeity Galaxy) திரையரங்கில் ‘ஜவான்’ திரைப்படம் காலை 6 மணி காட்சியாக திரையிடப்படுகிறது. இவ்வாறு 6 மணிக்கு ரிலீசாகும் முதல் இந்தி திரைப்படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular