Saturday, July 27, 2024
HomeTamilஇலங்கையில் மோடியின் தலையீடு - அண்ணாமலை வரவேற்பு!

இலங்கையில் மோடியின் தலையீடு – அண்ணாமலை வரவேற்பு!

இலங்கையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டிற்கு பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழகத் தலைவர் கே.அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அண்ணாமலை, இதற்கு முன் உலகின் எந்தத் தலைவர்களும் செல்லாத தூரத்தை மோடி இலங்கைக்குள் சென்றுள்ளார் என்று கூறியுள்ளார்.

2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் பிரதமர் மோடி இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டு பயணங்களும் வரலாற்று சிறப்பு மிக்கவையாகும் என தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பாரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவடைந்துவிட்டன அல்லது முடியும் தறுவாயில் உள்ளன என்று அண்ணாமலை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு மோடியின் இலங்கைப் பயணம், முந்தைய இந்திய அரசாங்கத்தின் திறமையின்மைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வளர்ச்சிக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான இந்தியாவின் நோக்கத்தை உறுதிப்படுத்தியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் காரைக்காலுக்கும் இடையில் படகுச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், கப்பல் சேவைக்கான கேள்வி மனுக்கோரல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மோடியின் நடவடிக்கைகளின் விளைவே, இந்தப் பகுதியில் சீனாவின் செல்வாக்கு தனிந்திருப்பதற்கான காரணம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular