Saturday, July 27, 2024
HomeTamilவேற லெவல் சென்சார்கள் கொண்ட ஸ்மார்ட் ரிங் அறிமுகம் செய்த நாய்ஸ்!!

வேற லெவல் சென்சார்கள் கொண்ட ஸ்மார்ட் ரிங் அறிமுகம் செய்த நாய்ஸ்!!

நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய லுனா ரிங் மாடலை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நாய்ஸ் நிறுவனம் ஸ்மார்ட் ரிங் பிரிவில் களமிறங்கி இருக்கிறது. பயனர் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வகையில், ஏராளமான அம்சங்கள், டிராக்கிங் வசதி உள்ளிட்டவைகளை லுனா ரிங் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் போட் நிறுவனம் தனது ஸ்மார்ட் ரிங் மாடலை அறிமுகம் செய்த நிலையில், தற்போது இந்த மாடல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாய்ஸ் லுனா ரிங் மாடல் சவுகரியமாக உணர செய்யும் வகையில் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட் ரிங் 3 மில்லிமீட்டர் அளவில் மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது.

பைட்டர் ஜெட் தர டைட்டானியம் பாடி மற்றும் டைமன்ட் போன்ற கோட்டிங் வழங்கப்பட்டு இருப்பதால், நீண்ட கால பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில், ஸ்கிராட்ச்களை தாங்கும் வகையிலும், எளிதில் துரு பிடிக்காத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேம்பட்ட சென்சார்கள் வழங்கப்பட்டு இருப்பதால், உடல்நல விவரங்களை கச்சிதமாக அறிந்து கொள்ள முடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular