Saturday, July 27, 2024
HomeTamilநடிகர் சிம்புவின் 'பத்து தல'

நடிகர் சிம்புவின் ‘பத்து தல’

ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள ‘பத்துதல’படத்தில் சிம்பு ஏ.ஜி.ஆர் எனும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வரும் 30ஆம் தேதி வெளியாகவுள்ள படத்திற்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கன்னடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக் என கூறப்பட்டாலும் படத்தின் திரைக்கதையில் பல்வேறு விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்திருந்தார்.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான ‘நம்ம சத்தம்’ பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் ‘நம்ம சத்தம்’ பாடல் வெளியாகி பத்து மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தை கவர்ந்து வருகிறது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

அண்மையில் வெளியான படத்தின் ‘மறப்போமா’ பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராவடி’ என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. சிநேகன் எழுதியுள்ள இந்தப்பாடலை சுபா, நிவாஸ் இணைந்து பாடியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular