Saturday, July 27, 2024
HomeTamil"பொன்னியின் செல்வன் -2" வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!

“பொன்னியின் செல்வன் -2” வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’. இப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் எப்படி உருவாகுகிறது என்ற கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular