Saturday, July 27, 2024
HomeTamilஜனாதிபதி ரணில் ஜப்பான் உத்தியோகபூர்வ விஜயம்!

ஜனாதிபதி ரணில் ஜப்பான் உத்தியோகபூர்வ விஜயம்!

இலங்கையின் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளவுள்ளார்.

அவர் நாளைய தினம் நாட்டில் இருந்து புறப்பட்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளும் அவர், குறித்த இரண்டு நாடுகளினதும் பிரதமர்களையும் சந்திக்கவுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

ranil
ranil

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை எளிதாக்குவதில் ஜப்பானின் முக்கிய பங்கை வகிக்கின்றது. புதிய முதலீடுகள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜப்பானிய அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கும் அதேவேளை இலகு தொடருந்து திட்டம் உட்பட பல திட்டங்கள் குறித்து ஜனாதிபதி இந்த விஜயத்தின்போது கலந்துரையாடவுள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இந்த விஜயங்கள் வாய்ப்புகளாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த விஜயங்களை நிறைவுறுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular