Saturday, July 27, 2024
HomeTamilவெசாக் வாரம் பிரகடனம்!

வெசாக் வாரம் பிரகடனம்!

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ‘வெசாக் வாரம்’ மே 2 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தியுள்ளது.

குறித்த காலப்பகுதியில் பல்வேறு சமய மற்றும் சமூக நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச வெசாக் விழா சிலாபம் கெபெல்லவெல ஸ்ரீ ரத்தனசிறி பிரிவேன் விகாரையில் ‘உனக்கே வெளிச்சமாக இரு’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளதாக அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அரச வெசாக் விழா நடைபெறவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular