Saturday, July 27, 2024
HomeTamilபேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் அவர்களும் தமிழ் தேசிய ஈடுபாடும்!

பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் அவர்களும் தமிழ் தேசிய ஈடுபாடும்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ.விக்னேஸ்வரன் மாரடைப்பால் காலமானார்.

மாணவர்கள் மாவீரர் தினம் , திலீபன், அன்னைபூபதி ,பொன்சிவகுமாரன் போன்றோரின் நினைவு தினங்களை பல்கலைக்கழகத்தில் அனுஸ்ரிப்பது வழமை அத்தனையிலும் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவியில் இருக்கும் போது பங்கு பற்றிய ஒரே ஒரு துணைவேந்தர் இவர் ஆவார்.

இவ்வாறான நிகழ்வுகள் துணைவேந்தர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள சுற்றுவட்டத்தில் நடைபெறுவது வழமை.

அன்றைய காலத்திலே அனைவரது திருவருவப்படங்களும் புதிதாக தயாரிக்கப்பட்டது. ஒருநாள் கடையில் இருந்து படத்தை கொண்டு வருவதற்கு ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. அந்த நேரம் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியே செல்ல தயாரான துணைவேந்தரை விடையத்தை கூறி மறித்த போது மறுக்காமல் , அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஒரு மணித்தியாலம் தனது காரிலே காத்திருந்து அந்த நிகழ்வில் முதன்மை சுடரேற்றினார்.

சகலரும் அஞ்சும் பொங்கு தமிழ் பிரகடன தூபியை மீளமைக்க எடுக்கப்பட்ட முயற்சிக்கு தடை ஏற்படுத்தாது பின்னர் தானே அதனை தமிழமுத விழா என்று திறந்தும் வைத்தார். மாவீரர் தூபி புனரமைப்பும் அவருடைய காலத்தில் செய்யப்பட்ட ஒன்று .

இன்று உடைத்து திருப்பி கட்டப்பட்ட முள்ளிவாய்கால் தூபி முதலில் பல்கலைக்கழகத்தின் மத்தியில் உள்ள ஒரு இடத்தில் அத்திவாரம் வெட்டி ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கெல்லாம் அனுமதி பெற்று கட்டுவது என்பது அவருக்கு பல அழுத்தங்களை உருவாக்கும் ஆனால் அவருக்கு தெரியாமல் கட்டுவது அவரின் சம்மந்தம் இல்லாமல் அவரின் கோபத்திற்கு உள்ளாக்கும்.

அதற்கான வேலைப்பாடு துவங்கமுன் இவ்வாறு ஒன்றை மாணவர்கள் நாளை கட்டுகிறார்கள் இதற்கு அனுமதி தருவது உங்களுக்கும் நல்லமில்லை ஆனால் உங்களுக்கு தெரியாமல் அதை கட்டுவது நல்லமில்லை என்று மாணவர்கள் கூறிய போது தடை இல்லை முழுமையான அனுமதித்தார்.

அடுத்தநாள் பல்கலைக்கழக அடுத்த மட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு வர அடுத்தநாளே சில முக்கிய பிடாதிபதிகள் துணைவேந்தர், பதிவாளருடன் துணைவேந்தர் அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடல். முதலில் கட்ட தடை பின்னர் அந்த இடத்தில் கட்ட தடை இறுதியாக தற்போது தூபி உள்ள இடத்தை தந்து அதில் கட்டுவதற்கு எதிர்ப்பு இல்லாத சூழலை உருவாக்கினார்.

இத்தனைக்கும் துணைவேந்தரின் உளரீதியான ஆதரவு இருந்தமையே வெற்றிக்கு காரணம்.
மீண்டும் புதிய இடத்தில் அத்திவாரம் வெட்டி கட்டப்பட்டுகொண்டிருந்த போது அன்றைய உயர் கல்வி அமைச்சரும் இன்றைய நீதி அமைச்சருமான வியஜதாச ராஜபக்ச இடம் இருந்து காட்டமான கடிதம் துணைவேந்தருக்கு வந்தது. உடனடியாக அந்த தூபியின் கட்டுமானத்தை நிறுத்தும்படி.
சூழ்நிலையை புரிந்து நிதானமாக செயற்பட்டதால் அன்று அதனை அமைதியாக நடந்து விட்டது. பின்னர் படிப்படியாக சில வேலைகளை செய்து முழுமையாக்கமுன் பின்னர் இடிக்கப்பட்டது.

இடிக்கப்பட்டதால் அது இன்று பிரமாண்டமாக கட்டப்பட்டது.அதிகாரத்தில் உள்ளவர் ஒரு தமிழ்தேசிய வாதியாக இருக்கும் போது சிந்தனைகளை செயல்படுத்துவது இலகுவானது. இடை நடுவில் துணைவேந்தர் பதவி பறிக்கப்பட்டது.


அதற்கு உட்கிடை காரணம் மேற்குறிப்பிட்ட விடையங்களே. இதனால் பதவி பறிக்கப்பட்ட பின் அவரை கௌரவிக்கும் முகமாக அடுத்த தமிழமுதத்தின் பிரதம விருந்தினராக அழைத்து கௌரவித்திருந்தது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular