Saturday, July 27, 2024
HomeTamilஇந்த ஆண்டு O/L பரீட்சையை நடத்த வேண்டாம்!!

இந்த ஆண்டு O/L பரீட்சையை நடத்த வேண்டாம்!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதனால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 600,000 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடாத்துவதைப் பற்றி பரிசீலிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த எம்.பி அழகப்பெரும, அதற்குப் பதிலாக அனைத்து மாணவர்களும் உயர்தரக் கல்வியை ஆரம்பிப்பதற்கு தகுதியுடையவர்கள் என பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழை வழங்குமாறு அறிவுறுத்தினார்.

“எந்த மாணவருக்கும் அநீதி இழைக்கப்படாது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வைத்து எவரும் வேலைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதும் உண்மையாகும்” என அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் மாணவர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

லண்டன்க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக மாணவர்களுக்கு பெரும் சலுகை கிடைத்ததாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும, தனது முன்மொழிவை பரிசீலிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular