Saturday, July 27, 2024
HomeTamilபிரான்சில் அரசுக்கு மக்கள் போராட்டம்!!

பிரான்சில் அரசுக்கு மக்கள் போராட்டம்!!

பிரான்சில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 64 ஆக உயர்த்த அரசு முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன.

இதற்கிடையே ஓய்வு வயது 64 ஆக உயர்த்தும் சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் நிறைவேற்ற அரசு முடிவு செய்து இருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரித்து பேராட்டங்கள் வெடித்தது.

தலைநகர் பாரீசில் சுமார் 7 ஆயிரம் பேர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள கான்சார்ட் சதுக்கம் அருகே குப்பை உள்ளிட்ட பொருட்களை தீ வைத்து எரித்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

நேரம் செல்ல செல்ல போராட்டம் தீவிரமடைந்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து செல்லாமல் காவல்துறையினருடன் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது.

பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதாவை நிறைவேற்றும் அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதில் இம்மானுவேல் மெக்ரான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்று தீவிர வலதுசாரி எதிர்க்கட்சி தலைவர் மரின் லுபென் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular